கோவை மாநகரில் திடீரென சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பிகள்: உயிர் தப்பிய பொதுமக்கள்

கோவை டவுன்ஹால் அருகே உள்ள நாஸ் திரையரங்கம் பகுதியில் திடீரென மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு வழங்கினர்.


Coimbatore: கோவை மாநகரின் மத்திய பகுதியான டவுன்ஹால் அருகே உள்ள நாஸ் திரையரங்கம் பகுதியில் திடீரென மின் கம்பிகள் அறுந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் செல்லும் ஒருவழிப் பாதையில் உள்ள நாஸ் திரையரங்கம் அருகில் மின் கம்பத்திலிருந்த மின் கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. இந்த கம்பிகள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தன.

உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் கடை ஊழியர்கள் சாலையில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் மின்வாரிய ஊழியர்களுக்கும் தகவல் அளித்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அருகில் உள்ள டீக்கடையில் இருந்தவர்கள், மின் கம்பிகள் மீது அணில்கள் அதிக அளவில் ஓடியதால் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம் என நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர். இது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சி கலந்த நகைச்சுவையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மின்வாரிய அதிகாரிகள் விரைவில் பழுதை சரி செய்து, மின் இணைப்பை சீரமைத்தனர். காவல்துறையினரின் துரித நடவடிக்கை பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்த்தது என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...