தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்.பி ஆ.ராசா

நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, கோவை வடக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.


Coimbatore: நீலகிரி மக்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஜூலை 11 அன்று நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டத்தின் கூடலூர் நகராட்சி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் எம்.பி ஆ.ராசா.

சாந்திமேடு, செல்வபுரம், வட்டப்பாறை, திருமலைநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம், கணேசபுரம், கவுண்டம்பாளையம், புதுப்புதூர், பழையபுதூர், தெக்குப்பாளையம், நாயக்கனூர், வீரபாண்டி ஆகிய பகுதிகளின் வாக்காளர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி ஆர் சண்முகசுந்தரம், கூடலூர் நகர செயலாளர் அ.அறிவரசு, வீரபாண்டி பேரூர் கழகச் செயலாளர் வே.சுரேஷ் மற்றும் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஆ.ராசா, தொடர்ந்து மக்கள் நலனுக்காக உழைப்பதாக உறுதியளித்தார். அவர் தனது உரையில், "நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன். நமது பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...