திருப்பூரில் பள்ளி மாணவியின் தாய் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் அம்மன் நகரில் பள்ளி மாணவியை அழைத்து வர சென்ற தாய் சிவகாமி, எதிர்பாராத விபத்தில் லாரி பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: திருப்பூர் அருகே உள்ள வாவிபாளையம், திருமுருகன் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி சிவகாமி, தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை வழக்கம்போல் தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வர சென்ற சிவகாமி, திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அங்குள்ள ஒரு கடையின் முன் நின்றிருந்த மற்றொரு இருசக்கர வாகனம் திடீரென இயக்கப்பட்டதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.



அப்போது அவ்வழியே வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவ தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திருமுருகன்பூண்டி போலீசார், சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டுநர் முத்துராஜா மற்றும் லாரி ஓட்டுநர் பவளமணி ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...