கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


Coimbatore: கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11.07.2024 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் VMC. மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் MN. கந்தசாமி, மாமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர்கள் பச்சைமுத்து, PS. சரவணக்குமார், மாநில செயலாளர் V. விஜயகுமார், மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாவட்ட துணைத் தலைவர் V. வெங்கிடபதி வரவேற்புரை நிகழ்த்தினார். சர்க்கிள் தலைவர் ஐ.எஸ். மணி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சுல்தான்பேட்டை கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி. ஆறுச்சாமி, வி.எம். ரங்கசாமி, செல்வபுரம் ஆனந்த், OBC செயல் தலைவர் பழனிச்சாமி, மோகன்ராஜ், லலிதா மோகன்ராஜ், கணபதி அசோக் குமார், பேரூர் மயில், மாரியப்பன் துரை அருள் தாஸ், ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு வட்டாரத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளைக் கண்டித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அரசியல் நாகரிகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...