பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன்

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றினார். அவரது மனிதநேய செயல் பாராட்டப்பட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்களை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பொள்ளாச்சி தாமரைகுளத்தைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தனது இரு மகன்களான தரணீஸ் மற்றும் தரணீந்திரனுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார். கோவில்பாளையம் அருகே அவர்களது வாகனம் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதியதில் மூவரும் காயமடைந்தனர்.



சம்பவ இடத்தின் வழியாக கோவையிலிருந்து திரும்பி வந்த பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், விபத்தை கண்டதும் உடனடியாக தனது அரசு வாகனத்தில் காயமடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் சிகிச்சை தேவைப்பட்டதால், காயமடைந்தவர்களை கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பி வைத்தார்.

நகராட்சி தலைவரின் இந்த மனிதநேய செயல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவசர காலங்களில் அதிகாரிகள் இது போன்ற மனிதநேய அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...