அமித் ஷாவின் குற்றப்பின்னணி இதோ!அண்ணாமலைக்கு இளைஞர் காங்கிரஸ் கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது அவதூறு பரப்பும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆருத்ரா மோசடி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Coimbatore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மீது அவதூறு பரப்பி வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலையை கடுமையாக கண்டிப்பதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "எங்களது மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை பற்றி அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடும் கண்டனம்" என்று தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம், ஆயிரம் கோடிக்கும் மேல் மோசடி நடந்திருப்பதாக தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும், இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும், இது தொடர்பாக காவல்துறையும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆருத்ரா மோசடி, ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் ஆகியவற்றில் பாஜக பிரமுகர்கள் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நேரடியாக பதில் அளிக்காத அண்ணாமலை, அண்ணன் செல்வப்பெருந்தகையை மீது புழுதிவாரி தூற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை வெளியிட்ட வழக்கு பட்டியல் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஸ்ரீநிதி பிரேம், "அவர் முதலில் மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதான வழக்கு பட்டியலை வெளியிட்டு அதற்கு விளக்கம் அளிக்க தயாரா?" என்று கேட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதான வழக்குகள் பட்டியலை விவரித்துள்ள அவர், அவற்றுக்கு விளக்கம் அளிக்குமாறு அண்ணாமலையை கேட்டுக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட பட்டியல் இதோ:

1. IPC 506

கிரிமினல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

2. IPC பிரிவு-153A/1

வீட்டை அழிக்கும் நோக்கத்துடன் தீவைத்தல், வெடிபொருள் பயன்படுத்துதல், சதி செய்தல்

தொடர்பான குற்றச்சாட்டுகள்,

3. IPCபிரிவு-153B/ 2

இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில்

இனம், மொழி, பிறந்த இடம், வசிப்பிடம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல்

4. IPC பிரிவு-500

அவதூறுக்கான தண்டனை தொடர்பான குற்றச்சாட்டுகள்

5. IPC பிரிவு-503/1

குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

6. IPC பிரிவு-504/1

அமைதியைக் குலைக்கும் வகையில் வன்முறையை தூண்டும் நோக்கத்துடன் பேசுதல், செயல்படுதல், வேண்டுமென்றே அவமதிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள்

7. IPC பிரிவு-427

ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தல், தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள்

8. IPC பிரிவு-499

அவதூறு செய்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள்

9. IPC பிரிவு-188

பொது ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை தொடர்பான குற்றச்சாட்டுகள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு, நீதி தேவன் மயக்கத்தால் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் 'Exemplary Rowdy Sheeter'

"அமித்ஷா" உள்துறை அமைச்சராக உள்ளது குறித்து வாய்திறப்பாரா? என்று கேட்டுள்ளார்.

ஆருத்ராவுக்கும் பாஜக மற்றும் அமர்பிராத் ரெட்டி, ஆர்.கே. சுரேஷ் மற்றும் ரவுடி ஆற்காடு சுரேஷ்'கும் உள்ள தொடர்பு குறித்து அண்ணாமலையிடம் இருந்து பொதுமக்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காதவர்கள், ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டு சிறையில் இருந்து வந்தவர்கள் வழித் தோன்றல்களுக்கு தியாக பரம்பரையில் வந்த காங்கிரஸ் பற்றியும், காங்கிரஸ் தலைவர்கள் பற்றியும் குறைகூற துளியும் அருகதை இல்லை" என்றும் ஸ்ரீநிதி பிரேம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...