கோவையில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் பகுதியில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இமயம் ரஹ்மத்துல்லா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


கோவை: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அண்ணாமலையை கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையினர் சார்பாக கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.



தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் சங்கர், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.

சிக்கந்தர், கோட்டை இஸ்மாயில், மீன் அபு, கனி, அப்துல் ரஹ்மான், விஷ்ணு, பைசல், காஜா, ஆயில் ரியாஸ், அனீபா, நாசர், ஆரிஸ், மைதீன், உசேன் மற்றும் மாவட்ட பகுதி வார்டு மகளிர் அணி, ஆட்டோ தொழிற் சங்கம் உறுப்பினர்கள் என பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...