கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒப்பந்தப்படி கூலி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்சனைக்கு 4 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்படி கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வலியுறுத்தியும், இதுவரை பிடித்தம் செய்த கூலி தொகையை வழங்க வலியுறுத்தியும் கடந்த 2-ம் தேதிமுதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 17 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் காரணமாக 1 லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன், நாள் ஒன்றுக்கு 22 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்,

மேலும், இதுவரை 450 கோடி ரூபாயிக்கும் மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதனைக் கண்டித்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.

இதனிடையே நேற்றிரவு காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் 4 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதன் பேரில் விசைத்தறி உரிமையாளர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...