கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே அப்புலுபாளையம் மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பத்து நாள் நிகழ்வில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள அப்புலுபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்வு கடந்த பத்தாம் தேதி மங்கல இசையுடன் தொடங்கியது.

விழாவின் முதல் நாளில், ராஜ கணபதி கோயிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. அதைத் தொடர்ந்து புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அடுத்த நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.



ஸ்ரீ மாகாளியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் விக்கிரகங்களுக்கு நூதன பிம்ப சுத்தி திருமஞ்சனம், விமான கலச பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மங்கள ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும் நடத்தப்பட்டன.

கும்பாபிஷேக நாளன்று காலை 6 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜை, அபிஷேக பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக குழுவைச் சேர்ந்த வி.ராஜேந்திரன், குணசேகரன், பாலாஜி, அருள்மணி, சேகரன், வீரபத்திரன், தேவராஜ், ஜெயலட்சுமி, தாமோதரசாமி நாயுடு மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...