உடுமலையில் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை ருத்ரப்ப நகரில் சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல்வேறு சடங்குகளுடன் கூடிய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ருத்ரப்ப நகரில் அமைந்துள்ள ஸ்ரீசித்தி விநாயகர், விசாலாட்சி அம்மன், பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த விழா கடந்த 10ம் தேதி புனித தீர்த்தம் அழைத்து வருதல் மற்றும் முளைப்பாறி எடுத்தல் நிகழ்வுடன் துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால யாகம், மங்கள இசை, வேத பாராயணம், விக்னேஸ்வரா பூஜை, புண்யாக வசனம், வேதிகார்ச்னை, தத்கல் மூலமந்திர ஹோமங்கள், யார்ர தானம், கடம் புறப்பாடு ஆகிய சடங்குகள் நடைபெற்றன.



தஞ்சாவூர் தினேஷ் செல்வ முத்துக்குமார் சிவாச்சாரியர் தலைமையில் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் இராஜ கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகள் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்திற்குப் பின்னர், பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பிறகு, ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீ பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகா தேவி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களின் பேராதரவுடன் இந்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...