கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டி துவக்கம்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கான தடகளப் போட்டியை துவக்கி வைத்தார். 42 பள்ளிகளைச் சேர்ந்த 950க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் மாநகराட்சிக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தடகளப் போட்டியினை துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட நேரு உள் விளையாட்டு அரங்கில், எஸ்.என்.எஸ் கல்வி குழுமம், வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து நடத்தும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தடகளப் போட்டியினை மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் அவர்கள் முன்னிலையில், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் இன்று (12.07.2024) துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கல்வித்திறனை மட்டுமல்லாது மாணவ, மாணவியர்களின் தனித் திறன்களையும் வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் (12.07.2024) எஸ்.என்.எஸ் கல்வி குழுமம், வி.ஜி.எம் மருத்துவமனை மற்றும் கோவை அத்லெடிக் கிளப் இணைந்து நடத்தும் தடகளப் போட்டியினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.



இப்போட்டியில் மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 42 பள்ளிகளைச் சேர்ந்த 950 மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும், இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், அதேபோன்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பள்ளிகளுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. மேலும் இப்போட்டியில் பங்கு பெறும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.



இந்நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் Dr சு.செல்வசுரபி, மத்திய மண்டல குழுத் தலைவர் மீனா லோகு, கல்விக்குழுத் தலைவர் மாலதி நாகராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அருணா, மாநகராட்சி உதவி ஆணையர் செந்தில்குமரன், வி.ஜி.எம் மருத்துவமனை தலைவர் வி.ஜி.மோகன் பிரசாத், எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்வர் எஸ்.செந்தூர் பாண்டியன், சக்தி கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபன் தங்கவேலு, கோவை மாவட்ட தடகள சங்கத் தலைவர் பி.கே.சம்சுதீன், பொருளாளர் ஜான் சிங்கராயர், துணைத் தலைவர்கள் கோவை ரமேஷ், ஜி.கே.ரத்தினவேல், கோவை அத்லெடிக் கிளப்பின் தலைவர் மற்றும் தமிழ்நாடு தடகள தொழில்நுட்ப தலைவருமான எஸ்.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...