உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார்

உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஓபிஎஸ்-ஐ அவமதித்து பேசியதாக குற்றச்சாட்டு.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தில் ஓபிஎஸ் அணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை 'துரோகி' என்றும் 'பச்சை துரோகி' என்றும் அவரது புகழுக்கும் மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தும் வகையில் தினமும் உள்நோக்கத்துடன் ஊடகங்கள் மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், இதனால் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு தொண்டர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனு வழங்கும்போது தொகுதி செயலாளர் லட்சுமணன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், தெற்கு ஒன்றியம் அவைத்தலைவர் சிவன், உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் மணி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, உடுமலை மேற்கு ஒன்றிய வர்த்தக செயலாளர் கண்ணன், உடுமலை வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் அரி முருகன், கிளைச் செயலாளர்கள் பழனிச்சாமி, மாசிலாமணி, நாட்ராயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...