மேட்டுப்பாளையம்-காரமடை அருகே லாரி மீது மோதிய தனியார் பேருந்து: ஒருவர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்-காரமடை அருகே தனியார் பேருந்து அதிவேகமாக வந்து லாரி மீது மோதியதில் கீதாமணி முட்டைகடை பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். விபத்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-காரமடை அருகே தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்து லாரி மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோவை மாநகருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதற்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக வருமானத்தை பெருக்க தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்று மாலை மேட்டுப்பாளையம்-காரமடை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்பு லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அதிவேகத்தில் கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து, அங்கு நின்றிருந்த இருவர் மீது மோதிவிட்டு, லாரி மீதும் மோதி நின்றது.

இந்த விபத்தில் கீதாமணி முட்டைகடை பணியாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து நடந்த காட்சிகள் அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...