கோவை கரும்புக்கடை அருகே கொள்ளைத் திட்டம் தீட்டிய 5 பேர் கைது

கோவை குனியமுத்தூரில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் பிடிக்கப்பட்ட இவர்களிடமிருந்து கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே கொள்ளை திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குனியமுத்தூர் போலீசார் ஜூலை 12 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கரும்புக்கடை ஆசாத் நகர் அருகே உள்ள காலி மைதானத்தில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முரணான பதில்களை அளித்தனர். மேலும் சோதனை செய்தபோது, அவர்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

இதனையடுத்து, அந்த 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த முகமத யாசீர் (22), சுண்ணாம்பு காளவாயைச் சேர்ந்த முகமத் அனாஸ் (23), இப்ராஹிம் (36), சுகுணாபுரத்தைச் சேர்ந்த சர்புதீன் (23), மற்றும் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த முகமத் வாசீம் (19) ஆகியோர் ஆவர்.

கைதான 5 பேரிடமிருந்து போலீசார் 5 கத்திகள் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...