PICME 3.0 பதிவு முறையை எளிமையாக்க கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை..!

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், PICME 3.0 பதிவு முறையை எளிமையாக்குதல், சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.


Coimbatore: கோவை தாமஸ் கிளப் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் சி. பரமேஸ்வரி பேசினார்.

பரமேஸ்வரி கூறுகையில், "புதிதாக உருவாக்கப்பட்டுள்ள PICME 3.0 பதிப்பில் பல சிக்கல்கள் உள்ளன. தற்போதைய முறையில், கர்ப்பிணிகளை பதிவு செய்யும்போது அவர்களின் அலைபேசி எண்ணுக்கு OTP அனுப்பப்படுகிறது. இது பல ஏழை எளிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, PICME 3.0 பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும்," என்றார்.



மேலும் அவர், "பொது சுகாதாரத் துறையில் ஆண்-பெண் ஊதிய வேறுபாடு நிலவுகிறது. சம ஊதியம் வழங்க கோரி அரசுக்கு கடிதம் அளித்துள்ளோம். 2500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

கிராம சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில், தாய் சேய் மரண ஆவணங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்றும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.



"அரசு தொடர்ந்து பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. எங்கள் துறையையும் உற்று நோக்கி அரசு உதவி செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல நேரிடும்," என பரமேஸ்வரி எச்சரித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...