கோவையில் மத ஒற்றுமையைப் பறைசாற்றிய இஸ்கான் தேரோட்டம்..!

கோவையில் இஸ்கான் அமைப்பின் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒப்பணக்கார வீதியில் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்று, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகன்னாதர் தேரோட்டம் நடைபெற்றது. ஒடிசாவின் புரி ஜெகன்னாதர் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த தேரோட்டம் நடத்தப்பட்டது.

தேர்முட்டியில் தொடங்கிய தேரோட்டம், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர்முட்டி நோக்கிச் சென்றது. ஒப்பணக்கார வீதியில் தேர் சென்ற போது, அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தேரை வரவேற்றனர். இஸ்கான் அமைப்பினர் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு பிரசாதம் வழங்கி அன்பை பரிமாறிக் கொண்டனர். இந்த செயல் பார்ப்போரை நெகிழச் செய்தது.



அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ஜெகன்னாதர், சுபத்ரா தேவி, பலதேவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். தேரோட்டத்தின் போது பக்தர்கள், "ஹரே ராம ஹரே கிருஷ்ணா" என்று பஜனை பாடிக் கொண்டும், பெண்களும் சிறுமிகளும் கும்மியாட்டம் ஆடிக் கொண்டும் சென்றனர்.



பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த தேரோட்டமானது நடைபெற்றது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் தேரைப் பின் தொடர்ந்து சென்றன. இந்த தேரோட்டம் கோவையில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...