பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட விசிக பிரமுகர் உள்பட 10 பேர் கைது: ரூ.2.70 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வீட்டில் நடந்த சூதாட்டத்தில் விசிக கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் ரூ.2.70 லட்சம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் சூதாட்டம் நடைபெற்றதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் நடத்திய திடீர் சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) பிரமுகர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள வெங்கடாசலம் என்பவரின் வீட்டிற்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திடீரென போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப் பணம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட்டவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் பிரபு, கார்த்திகேயன், மணிகண்டன், கணேஷ் பாபு ஆகியோர் அடங்குவர். மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...