காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணி

காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு சீரமைப்பு, தூர்வாரும் பணி மற்றும் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றினர்.


கோவை: கோவையில் உள்ள காட்டம்பட்டி (கடத்தூர்) குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் முக்கிய களப்பணிகள் நடைபெற்றன.



இரண்டாம் கட்டமாக Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



அதேசமயம், ஸ்ரீபண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் CSR நிதியுதவியுடன் நடைபெறும் தூர்வாரும் பணியில் எடுக்கப்படும் மண் கொண்டு கரை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



மேலும், குளத்தின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை மாற்றியமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.



இந்த பணிகள் அனைத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் ஜூலை 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...