கோவையில் நீட் தேர்வு ரத்து கோரி திராவிட மாணவர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர்.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இன்று ஜூலை 14ஆம் தேதி திராவிட மாணவர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பலரும் கருப்பு சட்டை அணிந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கார்டூன் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாக பரிசோதனை என்ற பெயரில் அயோக்கியத்தனம் நிகழ்த்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். ஆனால் வடநாடுகளில் மட்டும் எந்தவித கட்டுப்பாடுமில்லாமல் கேள்விகளுக்கு லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொள்கிறார்கள் என தெரிவித்தனர்.

தமிழ்நாட்டு மக்களின் மாணவர்களின் இளைஞர்களின் முன்னேற்றம் அவர்களுக்கு கண்ணை உறுத்துவதாகவும், தமிழகத்தின் ஆட்சியும் அவர்களுக்கு கண்ணை உறுத்துவதாகவும் மத்திய மோடி அரசை விமர்சித்தனர். மேலும், திமுகவை ஒழிக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்படுவதாக சுட்டிக்காட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...