மேட்டுப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம்: 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

மேட்டுப்பாளையம் சங்கர் நகரில் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இதில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் இரா.அமுதா அவர்களின் ஆலோசனையின் பேரில், கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி இணைந்து மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதி மக்களுக்கு, பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.



மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அசரப் அலி மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். சங்கர் நகர் பகுதி வார்டு கவுன்சிலர் சங்கீதா முன்னிலை வகித்தார்.



கோவை, கவுண்டம்பாளையம் இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானாந்தர் மகராஜ் தலைமை தாங்கினார். சுவாமி மஹாம்பிகானந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவர் நந்தகிருஷ்ணன், செவிலியர் ராணி பழனிச்சாமி, தன்னார்வலர்கள் திலீப், கண்ணன், கிஷோர், அஜய், யுவனேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் எம். ஜெய்குமார் மற்றும் நகராட்சி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.



இந்த இலவச மருத்துவ முகாமில் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...