கோவையில் மது போதையில் டாஸ்மாக் அருகே ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

கோவை வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் 50 வயது நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50) என்பவர் வெள்ளலூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காகச் சென்றுள்ளார். அங்கு மற்றொரு மேஜையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் பார் ஊழியர்கள் அவர்களை வெளியேற்றினர். பின்னர் சேகரை மீண்டும் தாக்கி கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி சேகர் கீழே விழுந்துள்ளார். அவரைத் தாக்கிய நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.



நீண்ட நேரம் ஆகியும் சேகர் எழுந்து செல்லவில்லை. அப்போது அங்கு மது அருந்த வந்த ஒருவர் அவரை எழுப்ப முயன்றுள்ளார். அவரைத் திருப்பிப் பார்க்கும்போது கல்லில் பின் பக்க தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்து ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து டாஸ்மாக் பார் ஊழியர்களிடமும், சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் சேகரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தகராறில் ஈடுபட்டு சேகரைக் கீழே தள்ளிக் கொலை செய்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடை அருகே நடந்த இந்தக் கொலைச் சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...