கோவை: க.க.சாவடி, குப்பேபாளையம், போத்தனூர் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை

கோவையில் மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 16 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும்.


கோவை: கோவை மாவட்டத்தில் க.க.சாவடி, குப்பேபாளையம் மற்றும் போத்தனூர் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க.க.சாவடி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலூர் (ஒரு பகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம், கதவுகரை, புத்தூர், வடுகபாளையம், மொண்டிகாளிபுதூர், ரங்கப்பகவுண்டன்புதூர், மூணுகட்டியூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

போத்தனூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம், அவ்வை நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

மேற்கூறிய அனைத்து பகுதிகளிலும் மின்தடை நாளை (ஜூலை 16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...