தாராபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.


திருப்பூர்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தளவாய்பட்டினம் சிஎஸ்ஐ அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.



திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன், கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மரியாதை செலுத்தினார்.



பின்னர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை வழங்கினார்.



அவர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை அருந்தினார்.



மேலும், தனக்கு அருகில் இருந்த மாணவ மாணவிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...