உடுமலையில் ராணுவ பயிற்சி பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய கலை மற்றும் இலக்கிய போட்டிகள்

உடுமலை அருகே அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கலை மற்றும் இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகர் பகுதியில் மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் சைனிக் எனப்படும் ராணுவ பயிற்சி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் "பிரஜனா" என்னும் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் சென்னை, மதுரை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மற்றும் உடுமலை அரசு மாதிரி பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, புகைப்படப் போட்டி, ஓவியப்போட்டி, குறும்படம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. உடுமலை அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் குறும்படத்திற்கான முதல் பரிசை வென்றனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி மாணவர்கள் அதிக பரிசுகளை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி முதல்வர் கேப்டன் நேவி மணிகண்டன் மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியின் முன்னாள் சமூக அறிவியல் ஆசிரியர் சோமசுந்தரம் பேசுகையில், "தற்பொழுது படிக்கும் மாணவர்கள் சைனிக் பள்ளியின் பெருமையை அனைவரும் அறியும்படி படிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் அதிகமாக புத்தகம் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். புத்தகம் மூலம் ஏராளமான நன்மைகள் உண்டு" என்று கூறினார்.

விழாவில் அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் திபு, ஆசிரியர்கள், அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளி முன்னாள் சங்க நிர்வாகிகள் மேஜர் ஜெனரல் பாபு, கண்ணன், பாலசுப்பிரமணியம், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...