கோவை, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஜூலை 15 அன்று கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மித மழைக்கான மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று (ஜூலை 15) சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 15) இவ்விரு மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளைய தினம் (ஜூலை 16) கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மித மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை எச்சரிக்கையை அடுத்து, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களில் கவனமாக இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...