உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளும் ஓடைகளும் நீர்வரத்தை அளித்து வருகின்றன.


கடந்த இரண்டு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.


இத்தடையின் காரணமாக கோவிலுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வெள்ளப்பெருக்கு குறைந்த பிறகு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...