கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் 80வது ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சங்கமம் கலைக்குழுவின் 80வது ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 6 முதல் 60 வயது வரையிலான 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர். நாட்டுப்புற கலையை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


Coimbatore: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சங்கமம் கலைக்குழுவின் 80வது ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.

நாட்டுப்புற கலையை வளர்க்கும் நோக்கில் சங்கமம் கலைக்குழு சார்பில் பல இடங்களில் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் 6 வயது முதல் 60 வயது வரையிலான 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியின் தொடக்கமாக, சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கு ஏற்றினர், கலைஞர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர், மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நரசிம்மநாயக்கன்பாளையம் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய நிகழ்வு, முளைப்பாரி ஊர்வலத்துடன் விளையாட்டு திடலுக்கு சென்றது.

விளையாட்டு திடலில் இறைவணக்கத்துடன் சங்கமம் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில் துணை பயிற்சியாளர்கள் செல்வகுமார் கணேசன், மகேஸ்வரி செல்வகுமார், சந்தியா செல்வகுமார், விஜயமோகன் ஆகியோருடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்று ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



கிராமிய பம்பை இசைக் கலைஞர்கள் சிவசக்தி சண்முகம், சிவகுகன் ஆகியோரின் இசையிலும், பாடகர் சின்னசாமியின் பாடலிலும் கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் நடைபெற்றது. விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் ஜி மயில்சாமி கலந்துகொண்டு குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆனந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பி.வி.மணி, பேரூராட்சி உறுப்பினர்கள், தொழில்நுட்ப கலைக்குழுவைச் சேர்ந்த மலர் மோகன், பெலிக்ஸ், மனோஜ் கனகராஜ், சுரேஷ், வேலவன், பிரபாகரன், புனிதவதி முத்துகுமார் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...