கோவை மதுக்கரையில் கஞ்சா விற்பனை: 25 வயது இளைஞர் கைது

கோவை மதுக்கரையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஜூலை 5 ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் மதுக்கரை பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (25) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஈஸ்வரனிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல, கோவை போத்தனூர் போலீசார் நேற்று ஜூலை.14 ரோந்து பணி சென்றனர். அப்போது போத்தனூர்-பேருந்து நிலையம் வழியில் உள்ள காலி இடத்தில் சந்தேகம் படும்படி நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்ததில், அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. 

பின்னர் போலீசார் கஞ்சா விற்ற வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த முகமத் தஸ்தாகீர்(26) என்பவரை கைது செய்தனர். பின் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...