கோவையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

கோவை பொள்ளாச்சியில் 60 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஜூலை 15 அன்று இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் பெரும் அளவில் கஞ்சா விற்பனை செய்த இரு நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பசீர் மகன் ரஷீத் (30) மற்றும் உமர் மகன் கலீல் ரகுமான் (44) ஆகியோர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையப் பகுதியில் 60 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவ்விருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

இப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட இரு நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, ஜூலை 15 அன்று கஞ்சா வழக்கு குற்றவாளிகளான ரஷீத் (30) மற்றும் கலீல் ரகுமான் (44) ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...