கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28 வரை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூரில் 8வது ஆண்டு புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28 வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது. 285 அரங்குகள், பல மாநில பதிப்பாளர்கள் பங்கேற்பு, இலவச நுழைவு என பல சிறப்பம்சங்களுடன் நடைபெறவுள்ளது.



Coimbatore: கோயம்புத்தூரில் 8வது ஆண்டாக நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழாவில் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். 285க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



கடந்த ஆண்டு 2 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடைபெற்றதாகவும், இந்த ஆண்டும் அதே அளவு விற்பனை எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டார். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற Book Donation மூலம் 2000 புத்தகங்கள் சிறைவாசிகளுக்காக அளிக்கப்பட்டது போல், இந்த ஆண்டும் Donation Drive நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களை அந்தந்த பள்ளிகளில் இருந்து அழைத்து வரவும், மாணவர்களுக்கு பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார். அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகங்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.



புத்தகத் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்பதால், எந்த நாளிலும் பொதுமக்கள் வந்து பார்வையிடலாம் என்று ஆட்சியர் அழைப்பு விடுத்தார். இந்த புத்தகத் திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை புத்தகத் திருவிழா 2024ன் சிறப்பம்சங்கள்:

19.07.2024 (வெள்ளிக்கிழமை)

மாலை 6 மணி: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024 இளம்படைப்பாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

விருது பெறுவோர்

இரா. பூபாலன் (கவிதை நூல்)

நா.கோகிலன் (புனைவு நூல்)

வாழ்த்துரை : வழக்கறிஞர் K. சுமதி, எழுத்தாளர், பேச்சாளர்

20.07.2024 (சனிக்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வுகள் - இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்களுக்கான நிகழ்வு

மாலை 6.30 மணி: கொடிசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இந்த விருது ஒன்றரை லட்சம் ரூபாயும், பாராட்டு மடலும் கொண்டதாகும்)

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர் : மானுடவியல் ஆய்வாளர் முனைவர்.பக்தவத்சல பாரதி

வாழ்த்துரை: பேராசிரியர் S. சித்ரா, தமிழ்த் துறை தலைவர், பாரதியார் பல்கலைக் கழகம்.

21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை)

காலை 11 மணி: கவியரங்கம் - கவிஞர் உமா மோகன் 

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - இளம் படைப்பாளிக்ளுக்கு பயிற்சிப் பட்டறை

மாலை 6.30 மணி: இன்னிசையில் சங்கத் தமிழ் பாடல்கள் - ஜேம்ஸ் வசந்தன் குழுவினர்

22.07.2024 (திங்கட்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - 8, 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி

நண்பகல் 2 மணி: மாபெரும் கவியரங்கம் - டாக்டர் கவிதாசன்

மாலை 6.30 மணி: பெருங்கதையாடல் - பவா.செல்லத்துரை

23.07.2024 (செவ்வாய்க்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - கோவை நன்னெறிக் கழகம் வழங்கும் பட்டிமன்றம் - முனைவர் கலையமுதன் 

மாலை 3.30 மணி: "ஹைகூ கவிதைகள்" 50 ஆண்டுகள் வளர்ச்சியும் சாதனைகளும்

மாலை 6.30 மணி: சாழல் - சொற்போர்

24.07.2024 (புதன்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - கொங்கு நாட்டு கல்வியாளர்கள்

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - 

மாணவிகள் கவியரங்கம்

மாலை 3 மணி:  பேரூர் தமிழ் மன்றம் வழங்கும் கவியரங்கம்

மாலை 3 மணி: புலம் தமிழ் இலக்கியப் பலகை வழங்கும் கவியரங்கம்

மாலை 6.30 மணி:  தியேட்டர் மெரினா வழங்கும் "அந்நியள்" நாடகம்

25.07.2024 (வியாழக்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி

மாலை 4 மணி:  சுதந்திர தீபங்கள் நாடகம் 

மாலை 6.30 மணி: உடலுக்கும் - உள்ளத்திற்கும் ஏற்ற பயணங்கள் - சிறப்புரை மருத்துவர் சிவராமன்

26.07.2024 (வெள்ளிக்கிழமை)

11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டி

11 மணி: சிறுகதை மற்றும் குறும்படப் போட்டிகளுக்கான பரிசு வழங்குதல் 

மாலை 6.30 மணி: "கவியரசு கண்ணதாசனின் இன்னிசை பட்டிமண்டபம்" மரபின் மைந்தன் திரு. முத்தையா

27.07.2024 (சனிக்கிழமை)

காலை 10 மணி முதல் இரவு 8 மணி: தொழிலகம் தோறும் நூலகம் - தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் சிறப்புரை

28.07.2024 (ஞாயிற்றுக்கிழமை)

காலை 11 மணி: அறிவுக்கேணி நிகழ்வு - ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு வழங்கும் "பருவ நிலை மாற்றம்" குறித்த கருத்தரங்கம்

காலை 11 மணி:  பட்டிமன்றம்

மாலை 4 மணி: பட்டிமன்றம்

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...