அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 8 அடி உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, துவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அமராவதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,003 கனஅடியாக பதிவாகியுள்ளது. தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 72.67 அடியாக உள்ளது. நேற்று இந்த அளவு 64 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளதால், அமராவதி அணையின் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணையின் மொத்த நீர்க்கொள்ளளவு 90 அடியாகும். தற்போதைய நீர்மட்டம் 72.67 அடியாக இருப்பதால், அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால், விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மேலும், அணையின் நீர்மட்டம் உயர்வதால் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...