கோவையில் பழமையான மரம் சாய்ந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதம்; பார்வையற்ற தம்பதி உயிர் தப்பினர்

கோவை உருமாண்டம்பாளையத்தில் 90 ஆண்டுகள் பழமையான வெள்ளவேளா மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது. இதில் பார்வையற்ற தம்பதி மற்றும் வயதான தம்பதி வசிக்கும் இரு வீடுகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.


Coimbatore: கோவை மாநகராட்சி 14வது வார்டுக்குட்பட்ட உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் வசிக்கும் பார்வையற்ற தம்பதியினர் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

75 வயதான ஸ்ரீனிவாச பாபு மற்றும் அவரது மனைவி 60 வயதான சரோஜினி ஆகிய இருவருக்கும் கண் தெரியாது. இன்று காலை முதல் பெய்த மழையின் காரணமாக, சுமார் 10 மணியளவில் அவர்களது வீட்டின் அருகே இருந்த 90 வருட பழமையான வெள்ளவேளா மரம் வேருடன் சாய்ந்து விழுந்தது.



மரத்தின் ஒரு கிளை ஸ்ரீனிவாச பாபு வீட்டின் சமையல் அறை மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அவர்கள் வீட்டின் ஹாலில் இருந்ததால் உயிர் தப்பினர். அதே மரத்தின் மற்றொரு கிளை அருகில் வசிக்கும் 70 வயதான மாணிக்கம் மற்றும் அவரது மனைவி 62 வயதான வசந்தாமணி ஆகியோரின் வீட்டின் மீதும் விழுந்தது. அவர்களும் வீட்டின் வெளியில் இருந்ததால் உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தில் இரு வீடுகளின் கூரைகள் உடைந்தும், சுவர்கள் பாதிப்படைந்தும் உள்ளன. சம்பவ இடத்திற்கு 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா தங்கவேல், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் உத்தமன் ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் உரிய உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...