திருப்பூரில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' கட்டுமான பொருட்கள் கண்காட்சி வரும் 18ஆம் தேதி தொடக்கம்

திருப்பூரில் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' வரும் 18ஆம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது. 300 அரங்குகளில் புதிய தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படும்.


Coimbatore: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில், வரும் 18ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் நடைபெறும் கட்டட கட்டுமான பொருட்களுக்கான கண்காட்சி திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள வித்யா கார்த்திக் மகாலில் 'கன்ஸ்ட்ரோ மெகா 2024' என்ற பெயரில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதில் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் 300 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இது 19வது ஆண்டாக நடத்தப்படும் கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியாகும்.



கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "சுமார் 350 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக விசாரணை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாள்தோறும் புதிய டிசைன்கள், தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. அதற்கேற்ப கட்டட பொறியாளர்கள், வீடு கட்டுவோர் மற்றும் கட்டடம் கட்டும் எண்ணத்துடன் இருப்போர் அனைவருக்கும் கட்டுமான பணி சார்ந்த 'அப்டேட்' ஆக இந்த கண்காட்சியை நடத்துகிறோம்" என்றனர்.

வீடுகளின் முகப்பு கதவு முதல் சமையலறை வரை தேவைப்படும் கட்டுமான பொருட்களின் தற்போதைய புதிய வரவுகள் கண்காட்சியில் இடம்பெறும். மழை நீரை சேகரித்து குடிநீராக மாற்றும் இறக்குமதி தொழில்நுட்பம், மாடுலர் கிச்சன், எடை குறைந்த மெகா சைஸ் டைல்ஸ், செயற்கை மார்பிள், டிஜிட்டல் லாக், பயோ செப்டிக் டேங்க் என இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெறும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...