ஒடையகுளம் அருகே கனமழையால் இடிந்து விழுந்த வீடு: அமுல் கந்தசாமி எம்எல்ஏ நேரில் ஆய்வு

ஆனைமலை ஒடைய குளம் அறிவொளி நகரில் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டை வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார். குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


Coimbatore: ஆனைமலை, ஒடைய குளம் அறிவொளி நகரில் உள்ள செந்தில்குமார் என்பவரது வீட்டில் கனமழை காரணமாக நேற்று (ஜூலை 15) இரவு இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நள்ளிரவு 2 மணி அளவில் பலத்த சத்தத்துடன் செந்தில்குமாரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் குழந்தைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு அனைவரும் சுதாரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.



இச்சம்பவம் குறித்து அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி இன்று (ஜூலை 16) இடிந்து விழுந்த வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.

கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலங்களில் வீடுகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...