கோவை மாவட்டத்தில் சராசரி மழையளவு 25.25 மி.மீ பதிவு: பேரிடர் மேலாண்மை துறை தகவல்

கோவை மாவட்டத்தில் சோலையாரில் அதிகபட்சமாக 140 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 16 வரை பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் பதிவான மழையளவு விவரங்கள் பின்வருமாறு: சோலையார் - 140 மி.மீ, சிறுவாணி அடிவாரம் - 95 மி.மீ, மாக்கினாம்பட்டி - 88 மி.மீ, பொள்ளாச்சி - 66 மி.மீ, ஆழியார் - 49 மி.மீ, ஆனைமலை - 39 மி.மீ, மேட்டுப்பாளையம் - 33.50 மி.மீ.

மேலும், வேளாண் பல்கலைக்கழகம் - 11.20 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் - 1.80 மி.மீ, அன்னூர் - 2.40 மி.மீ, கோவை தெற்கு - 2.50 மி.மீ, சூலூர் - 11 மி.மீ, வாரப்பட்டி - 15 மி.மீ, தொண்டாமுத்தூர் - 5 மி.மீ, மதுக்கரை தாலுக்கா - 5 மி.மீ, போத்தனூர் ரயில் நிலையம் - 3 மி.மீ, கிணத்துக்கடவு - 13 மி.மீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தின் சராசரி மழையளவு 25.25 மி.மீ என பதிவாகியுள்ளது. இந்த மழை விவரம் ஜூலை 15 முதல் ஜூலை 16 காலை வரை பதிவான அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...