பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளின் கல்வித்திறன் குறித்து கேட்டறிந்த அமைச்சர், உயர்கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பொள்ளாச்சியில் இருந்து கோட்டூர் வழியாக சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், திடீரென கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் உள்ள இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் தனித்திறமைகளை நேரடியாக கேட்டறிந்தார். மேலும், ஆசிரியர்களிடம் மாணவிகளின் கல்வித்திறன் பற்றி விசாரித்தார். ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவிகளிடம் அன்று நடைபெற்ற பாடத்தின் கேள்வி வினாக்களையும் கேட்டு அறிந்தார்.

மாணவிகளுடன் உரையாடிய அமைச்சர், "கிராமத்தில் படிக்கும் நீங்கள் கண்டிப்பாக இடைநிலை கல்வியை தவிர்க்க வேண்டும். உயர்கல்வியை கட்டாயம் தொடர வேண்டும்" என்று வலியுறுத்தினார். இவ்வாறு மாணவிகளுக்கு ஊக்கமளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடைபெற்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...