அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு: பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு

உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாத கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி, அமராவதி அணைக்கு வினாடிக்கு 7,100 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.



மறையூர் கோவில் கடவு பகுதியில் உள்ள பாம்பாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்தும் அமராவதி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 75.14 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும்.



இந்நிலையில், அமராவதி அணை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...