மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. பில்லூர் அணையிலிருந்து 22,000 கன அடி நீர் திறப்பு. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேட்டுப்பாளையத்தில் உள்ள 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜூலை 16 அன்று காலை 3 மணியளவில் நான்கு மதகுகளின் வழியாக 16,000 கன அடி நீரும், மின் உற்பத்திக்காக 6,000 கன அடி நீரும் என மொத்தம் 22,000 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும், அதிகாரிகளின் அறிவுரைகளைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...