மின் கட்டண உயர்வு மக்களுக்கு தண்டனை - வானதி சீனிவாசன் கண்டனம்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் மின் கட்டண உயர்வு, தொடர் படுகொலைகள், காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார். திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கடுமையாக விமர்சித்தார்.

வானதி சீனிவாசன் கூறுகையில், "40க்கு 40 எம்பிக்களை அளித்த தமிழக மக்களுக்கு தண்டனையாக தமிழக அரசு மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 5% மின் கட்டண உயர்வு இருக்கப் போகிறது. திமுக அரசு, சொத்து வரி, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு என மீண்டும் மீண்டும் ஏழை எளிய மக்கள் மீது சுமையை ஏற்றி வருகிறது. மின் கட்டண உயர்வால், உற்பத்தி பொருட்களின் விலையும் உயரப் போகிறது. எனவே பல்வேறு வகையில் மக்களை பாதிக்க போகும் இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை," என்றார்.

மேலும் அவர், "தமிழகம் தான் இந்தியாவிலேயே அதிகப்படியான கடன் வாங்கி இருக்கும் அரசு. இருப்பினும் இங்குதான் அதிகப்படியான வரி உயர்வும் உள்ளது. இவ்வாறு அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் வகையிலேயே இந்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மின்சார உயர்வுக்கு உதய் திட்டம் காரணம் என்கிறார்கள். உதய் திட்டம், மக்களுக்கு வழங்கும் மின்சாரத்தை ஒழுங்குபடுத்த சொல்கிறதே தவிர மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை. இவர்கள் எது செய்தாலும் அதற்கான பழியை மத்திய அரசின் மீது சுமத்துவது வாடிக்கை," என்று குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் நிகழ்ந்து வரும் தொடர் படுகொலைகள் குறித்தும் வானதி சீனிவாசன் கவலை தெரிவித்தார். "தமிழகத்தில் நிகழ்ந்து வரும் தொடர் படுகொலைகள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடப்பதை காட்டுகிறது," என்றார்.

காவிரி விவகாரம் குறித்து பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கூறும் திமுக அரசு, ஏன் கூட்டணியில் இருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேச முடியாதா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், "கூட்டணி தர்மம் என்பது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர, மோடியை வீழ்த்துவதற்காக இருக்கக் கூடாது. அதிகமான எம்பிக்களை வைத்திருக்கிறோம், நாங்கள்தான் எதிர்க்கட்சியை வழிநடத்துகிறோம் என்று கூறும் திமுக அரசால், காங்கிரஸ் அரசிடம் பேசி கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற முடியவில்லையே, எப்படி இந்தியாவை ஆட்சி செய்வீர்கள்," என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...