கோவை அரசினர் மகளிர் கல்லூரியில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

கோவை அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 15 வகுப்பறைகள், 10 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்வில் திமுக செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவையில் உள்ள அரசினர் மகளிர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உயர் கல்வித்துறை சார்பில் 15 வகுப்பறைகள் மற்றும் 10 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஜூலை 16 அன்று திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராஜேந்திரன், எக்ஸிகியூட்டிவ் திருநாவுக்கரசு, துணை முதல்வர் கண்ணகி, அனைத்து கல்லூரி துறை தலைவர்கள், PWDC பொறியாளர்கள், வித்யா ராமனாதன் MC, கல்லூரி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...