அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 462 பயனாளிகளுக்கு ரூ.9.79 கோடி மதிப்பிலான கலைஞரின் கனவு இல்ல திட்ட ஆணைகள் வழங்கினார்

தாராபுரம், மூலனூர், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களில் 462 பயனாளிகளுக்கு ரூ.9.79 கோடி மதிப்பிலான கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்ட ஆணைகளை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி அரிமா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம், மூலனூர் மற்றும் குண்டடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 462 பயனாளிகளுக்கு ரூ.9.79 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகளை வழங்கினார்.



இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், தமிழக முதலமைச்சர் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், மக்களுக்குத் தேவையான திட்டங்களை உடனடியாக அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் அரசு முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்த கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை விரிவுபடுத்தி, 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிதியாண்டில் 1,00,000 வீடுகள் கட்டித் தரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், "மக்களுடன் முதல்வர்" திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அலுவலகங்களுக்குச் சென்று சிரமப்படக் கூடாது என்பதற்காக அனைத்து அலுவலர்களையும் ஒன்றிணைத்து ஒவ்வொரு ஊராட்சியிலும் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.



அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு, பள்ளி மாணவர்களுக்கான கண்ணொளி காப்போம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 39 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி, மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 40 பயனாளிகளுக்கு ரூ.1.40 கோடி, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 170 பயனாளிகளுக்கு ரூ.5.95 கோடி மதிப்பிலான வீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், தொகுப்பு வீடுகள் பராமரிப்புக்காக 213 பயனாளிகளுக்கு ரூ.1.08 கோடி மதிப்பிலான ஆணைகளும் வழங்கப்பட்டன.



நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர மன்றத் தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.வி.செந்தில்குமார், மூலனூர் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாவட்ட நகர ஒன்றிய திமுக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...