சவுக்கு சங்கர் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் விமர்சனம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமர்வு, சவுக்கு சங்கரின் நடத்தையை கடுமையாக விமர்சித்தனர். அவரது ஒழுக்கமற்ற பேச்சு மற்றும் நடத்தை குறித்து கேள்வி எழுப்பினர்.


Coimbatore: உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா மற்றும் அஹ்சானுதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கரின் வழக்கு விசாரணையின் போது கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் தங்கள் கருத்தில், "மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம். தன்னுடைய எல்லை மீறிய பேச்சு, நடத்தையால் எல்லா விதமான எல்லைகளையும் தாண்டும் வகையில் சவுக்கு சங்கர் நடந்துகொண்டுள்ளார்," என்று குறிப்பிட்டனர்.

மேலும், "ஏன் இப்படி ஒழுக்கமற்ற முறையில் சவுக்கு சங்கர் பேசியுள்ளார், நடந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர் இப்படி சமூக வலைதளம், ஊடகம் மூலம் கொதித்துக்கொண்டே இருக்க என்ன காரணம், அவரை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லுங்கள்," என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

உயர்நீதிமன்றத்தில் கூட கண்ணியமான முறையில் சவுக்கு சங்கர் நடந்துகொள்ளவில்லை என்பதும் நீதிபதிகளின் கவனத்திற்கு வந்துள்ளது.

இறுதியாக, சவுக்கு மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரிய அவரது தாயார் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...