கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்களுக்கு 3540 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.


Coimbatore: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 3540 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.




கோவையில் 182 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.




பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கினை செலுத்தி அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் ஓரிரு சந்தேகங்களையும் தீர்த்து வைத்தனர்.




இதனை அடுத்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்கினை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, நிழல் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்காளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.




மாவட்ட நிர்வாகம் அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...