கோவையில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்

கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கொடியேற்றம், இனிப்பு வழங்குதல், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.


கோவை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஜி வி நவீன் குமார் தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



குரும்ப்பாளையத்தில் ஓ பி சி மாநில பொதுச் செயலாளர் எஸ் எஸ் குளம் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி காங்கிரஸ் அலுவலகத்தில் சரவணம்பட்டி ரகுராமன் முன்னிலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. சரவணம்பட்டி பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் சாமுவேல் தாஸ் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.



விளாங்குறிச்சி காமராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளவை கோபால் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு, காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



விளாங்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



சேரன்மா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 10,000 மற்றும் ரூபாய் 5,000 நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.



அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.



வலியாம்பாளையம் மற்றும் சரவணம்பட்டி அரசு பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் சுந்தரசாமி, சின்னச்சாமி, சண்முகசுந்தரம், ரங்கசாமி, ரங்கநாதன், பாலு, முருகானந்தம், சுரேஷ், கார்த்திக், முரளி கிருஷ்ணன், விவேகானந்தன், கலைச்செல்வன், காசி, ராமலிங்கம், மாணிக்கம், பொன்னுச்சாமி, வேலுச்சாமி, ரவிக்குமார், ரமேஷ் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...