கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் துணை நடிகர்கள் உட்பட 5 பேர் கைது

கோவையில் சுங்கம் புறவழிச்சாலையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் மூன்று துணை நடிகர்கள் உட்பட ஐந்து பேர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். மேலும் நான்கு பேருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.


Coimbatore: கோவையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று துணை நடிகர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கோவை சுங்கம் புறவழிச்சாலை தனியார் கல்லூரி அருகே நடத்திய திடீர் சோதனையின் போது இவர்கள் பிடிபட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சினிமா துறையில் துணை நடிகர்களாக வேலை செய்யும் கோவை புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த யாசிக் இலாகி (26), போளுவாம்பட்டியைச் சேர்ந்த மரியா (31), தாழியூரைச் சேர்ந்த சினேகா ஆகியோர் அடங்குவர். மேலும், ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (24) மற்றும் சாரமேடு பகுதியைச் சேர்ந்த முஜிபூர் ரகுமான் (27) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐவரிடமிருந்தும் ஒரு கிலோ 410 கிராம் கஞ்சா, 200 போதை மாத்திரைகள், மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். இவர்களில் கள்ளாமேடு பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிக், ரிஸ்வான், மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் ஆகியோர் அடங்குவர். இவர்களைத் தேடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கோவை நகரில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. குறிப்பாக சினிமா துறையில் உள்ளவர்கள் இதில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...