உடுமலை அருகே பால் வண்டி தீப்பிடித்து எரிந்து நாசம் - ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில், பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும், பால் வண்டி முற்றிலும் எரிந்து நாசமாகியது.

முதற்கட்ட விசாரணையில், பால் வண்டியின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.



நல்ல வேளையாக, தீ விபத்து ஏற்படுவதற்கு முன் வாகனத்திலிருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனால் இருவரும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...