கோவையில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல்: கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோவையில் கடந்த ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.


Coimbatore: கோவையில் பெய்து வரும் கனமழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட அளவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழைநீர் தேங்கிய இடங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது: "டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் வகை கொசுக்கள் மழை-குளிர் வகை கொசுகள் கடிப்பதால் மனிதர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கோவை மாவட்டத்தில் ஜூன் மாதம் 34 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஜூலை மாதத்தில் இதுவரை 18 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது."

"வீடுகளை சுற்றியுள்ள டயர், ஆட்டுக்கல், டின்கள், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமான இடங்கள் போன்றவற்றில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே மேற்கொண்ட தேவையற்ற பொருட்களை கட்டி மழைக்காலத்தில் குப்புற கவிழ்த்து வைக்கலாம். அல்லது மழைநீர் புகாதவாறு பழைய பொருட்களை மூட்டையாக வைக்கலாம்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக திகழும் பழைய பொருட்களை உடனடியாக அகற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வீட்டுக்குள் இருக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றாத 50 வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஊரக, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் டெங்கு அதிகம் பாதித்த பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள சுமார் 90 இடங்களில் சுகாதார பணியாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...