கோவை சின்னவேடம்பட்டியில் குருவணக்க நாள் விழா: மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நிகழ்வு

கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழா தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிரவணபுரம் கெளமார மடாலயத்தில் வரும் 21-ம் தேதி அன்று முதலாம் ஆண்டு குருவணக்க நாள் விழா நடைபெற உள்ளது. இந்த விழா குழந்தைகள், குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் தற்போதைய தலைமுறையினர் நோய் நொடி இல்லாமல் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குனருமான குமாரசாமி கூறுகையில், "தற்போதைய தலைமுறைக்கு மன நிம்மதி, நல்ல பழக்கம், உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த குருவணக்க நாள் விழா அமையும்" என்று தெரிவித்தார்.



விழா நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் குருமூர்த்தம், திருக்கோயில் வழிபாடு, வள்ளிக் கும்மி, நடனம், மாயாஜால நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

மேலும், மடாலய வளாகத்தில் கண் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, புத்தகக் கண்காட்சி, இயற்கை கண்காட்சிகள் போன்ற பிற நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கெளமார மடாலயம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...