கோவையில் பல்வேறு குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

கோவையில் இறந்த பல்வேறு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மூத்த கட்சி உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்வியாளர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.


கோவை: கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முன்னாள் எம்.எல்.ஏ., இன்று (ஜூலை 17) பல்வேறு குடும்பங்களுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.



முதலில், கோவை மாநகர் மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் மோசஸின் தாயார் சந்திரா அவர்களின் மறைவையொட்டி, கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இந்த நிகழ்வில் 81-வது வட்டக் கழகச் செயலாளர் டவுன் பா.ஆனந்த் உடனிருந்தார்.



அடுத்ததாக, கோவை மாவட்ட வர்த்தகர் அணி துணைத் தலைவர் எம்.எஸ்.எம்.தங்கவேல் தாயார் சுந்தராம்பாள் அவர்களின் மறைவையொட்டி, நல்லாம்பாளையம் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், கணபதி பகுதி திமுக செயலாளர் கணபதி லோகு, சி.எஸ்.முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.



தொடர்ந்து, கோவை பிரபு இண்டஸ்ட்ரீஸ் அரவிந்த் அவர்களின் மனைவி கிருத்திகா அவர்களின் மறைவையொட்டி, நவ இந்தியா அருகில் உள்ள அவரது இல்லத்திற்கு நா.கார்த்திக் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.



இறுதியாக, கோவை நேஷனல் மாடல் பள்ளிக் குழுமங்களின் தாளாளர் ப. மோகன் சந்தர் அவர்களின் தாயார் ப.சாந்தாமணி அவர்களின் மறைவையொட்டி, கல்லூரி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று, உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன் உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...