காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி விழா கோலாகலமாக நடைபெற்றது

கோவை காரமடை அரங்கநாதர் கோவிலில் ஜூலை 17ஆம் தேதி ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம், வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.


Coimbatore: கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி விழா ஜூலை 17ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக கால சந்தி பூஜை, விஸ்வக் சேனர் ஆராதனை, புண்யாவதனம், கலச ஆவாஹனம் போன்ற வைபவங்கள் நடைபெற்றன. ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

பின்னர், அரங்கநாதபெருமாள் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி, மேள தாளங்கள் முழங்க கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பிறகு, ஆஸ்தானம் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உச்சி கால பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வேத பாராயணம், சாற்று முறை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தார்கள், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுவினர், பணியாளர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாத ஏகாதசி விழா காரமடை அரங்கநாதர் கோவிலில் பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...